செய்திகள்

இந்த முறை மிஸ் ஆகாது; உலகக் கோப்பையை வெல்ல ஆர்வமாக உள்ளோம்: நியூசிலாந்து வீரர்

முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டியில் கோப்பையை இழந்தது போல் இந்த முறை இழக்க மாட்டோம் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

DIN

முந்தைய உலகக் கோப்பை தொடர்களில் இறுதிப் போட்டியில் கோப்பையை இழந்தது போல் இந்த முறை இழக்க மாட்டோம் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் நியூசிலாந்து இறுதிப் போட்டி வரை முன்னேறி கோப்பையை இழந்தது. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிடமும், 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்திடமும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றுவோம் என டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: நான் அணிக்குத் திரும்பி வந்து உலகக் கோப்பை போட்டிகளுக்காக உழைக்க வேண்டும் என்பது எப்போதும் என்னுடைய மனதில் இருந்தது. ஏனென்றால், உலகக் கோப்பையை வெல்வதில் வரலாறு சம்பந்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உலகக் கோப்பையை வெல்வதற்காக நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் எனது பங்களிப்பை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் உலகக் கோப்பையை வென்று கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வருகிறேன். 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பைக்கு மிக அருகில் சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தோம். இந்த முறை உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT