செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக ஐஎல்டி20 தொடரில் விளையாடும் முதல் பாகிஸ்தான் வீரர்!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 லீக்கில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 லீக்கில் டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்காக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் முதல் பாகிஸ்தான் வீரராக ஷாஹீன் அஃப்ரிடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் டெசர்ட் வைப்பர்ஸ் அணியால் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அஃப்ரிடி கூறியதாவது: டெசர்ட் வைப்பர்ஸ் அணியுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் வருகிற ஐஎல்டி20 தொடரில் எங்களது அணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.

டெசர்ட் வைப்பர்ஸ் அணியில் வனிந்து ஹசரங்கா, மதீசா பதிரானா, டாம் கரண் மற்றும் ஷெல்டான் கார்டெல் போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஐஎல்டி20 தொடரின் அடுத்த சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT