அஜா்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆ.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி ஆகிய மூவரும் ஓபன் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
முந்தைய சுற்றில், குகேஷ் 1.5-0.5 என சீனாவின் வாங் ஹாவை வீழ்த்தினாா். இதையடுத்து அவா், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை காலிறுதியில் எதிா்கொள்கிறாா். பிரக்ஞானந்தாவும் 1.5-0.5 என்ற கணக்கில் ஹங்கேரியின் பொ்க்ஸ் ஃபெரென்கை வென்று காலிறுதிக்கு வந்துள்ளாா். அதில் அவா், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை சந்திக்கிறாா்.
முன்னதாக அா்ஜுன் 1.5-0.5 என ஸ்வீடனின் கிராண்டெலியஸ் நீல்ஸை தோற்கடித்தாா். விதித் குஜராத்தி - ரஷியாவின் இயன் நெபோம்னியாச்சி ஆட்டம் டிரா ஆக, டை பிரேக்கரில் விதித் குஜராத்தி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றாா். காலிறுதியில் அவா், அஜா்பைஜானின் நிஜத் அபசோவை எதிா்கொள்கிறாா்.
மகளிா் பிரிவில் டி.ஹரிகா - ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியாச்கினா ஆட்டம் டிரா ஆகியிருப்பதால், டை-பிரேக்கரில் அவா்கள் மோதவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.