படம் | ட்விட்டர் 
செய்திகள்

இந்தியா-அயர்லாந்து டி20 தொடர்: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

அயர்லாந்து-இந்தியா இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அயர்லாந்து-இந்தியா இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பும்ரா தலைமையிலான இளம் இந்திய அணி அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், முதல் இரு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருப்பதாவது: இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. மூன்றாவது போட்டிக்கான டிக்கெட்டுகளும் வேகமாக விற்று வருகின்றன  எனக் கூறப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 டி20 போட்டிகளும் அயர்லாந்தின் தி வில்லேஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் உள்ள மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை 11,500 ஆகும். 

இதுவரை அயர்லாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

ஓசூர் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

சொல்லப் போனால்... மருந்தெனப்படுவது விஷமானால்...

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT