படம்: ட்விட்டர் 
செய்திகள்

சிறந்த ஐவர்களில் இரண்டு பேட்டர்கள் ஆகச்சிறந்தவர்கள்: கிரேக் சாப்பல் 

முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் ஃபேபுலஸ் ஃபைவ்வில் இரண்டு வீரர்களை சிறந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். 

DIN

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஃபேபுலஸ் ஃபோர் (மிகச் சிறந்த நால்வர்) என்ற வார்த்தை பிரபலமானது. இதில் இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின்  கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளார்கள். தற்போது இந்த அடைமொழியில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் ஐந்தாவதாக இணைந்துள்ளார். அதனால்  ஃபேபுலஸ் ஃபைவ் என அழைக்கப்படுகிறது. 

ஒருநாள் உலகக் கோப்பை வரும் அக்.5ஆம் நாள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சாப்பல் நேர்காணல் அளித்துள்ளார்.

அதில்,“இந்த ஐவர்களுமே அவர்களது அணிக்காக அதிக ரன்களை எடுத்துள்ளார்கள். இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை வரும்நிலையில் இந்த ஐவர்களுக்குமே ரன்கள் குவிக்க அதிகம் வாய்ப்புள்ளது. ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், டி20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக இருப்பது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மட்டுமே. இந்த இரண்டு பேட்டர்கள் தங்களது முத்திரையை இந்த உலகக் கோப்பையில் பதிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார். 

விராட் கோலி டெஸ்டில் 8676 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 12898 ரன்களும் எடுத்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் டெஸ்டில் 9320 ரன்களும் ஒருநாள் போட்டிகளில் 4939 ரன்களும் எடுத்துள்ளார். 

ஸ்மித்தின் ஒருநாள் சராசரி 44.49 மற்றும் டெஸ்டில் 58.61 என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் ஒருநாள் சராசரி 57.32 மற்றும் டெஸ்டின் சராசரி 49.29 ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT