செய்திகள்

உலக தடகளம்: இறுதிப் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.  

DIN

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 

இறுதிப் போட்டிககான தகுதி சுற்றில், அவர் முதல் வாய்ப்பிலேயே 88.77 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.

கடந்த முறை உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை எப்படியும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு மேலும் 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். டிபி மனு 81.31 மீட்டர், கிஷோர் ஜெனா 80.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

குரூப் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா, டிபி மனு ஆகியோரும் குரூப் பி பிரிவில் கிஷோர் ஜெனாவும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இதனிடையே 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT