முகப்பு
செய்திகள்

எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த எப்போதும் உதவுவது ஒருநாள் போட்டிகளே: விராட் கோலி

ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:55 AM
பகிர்:

ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிகள் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டார் ஸ்போர்ஸுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒருவரின் விளையாட்டுத் திறமையை சோதிக்கும் தொடராக ஒருநாள் கிரிக்கெட் தொடர் அமையும். ஒருநாள் தொடரில் ஒருவரின் முழு விளையாட்டுத் திறமையையும் சோதிக்க முடியும். உங்களது திறன், பொறுமை, சூழ்நிலைக்கேற்ப விளையாடுவது போன்றவற்றை பரிசோதிக்க ஒருநாள் போட்டிகள் உதவும். அதனால், ஒருநாள் போட்டி ஒரு பேட்ஸ்மேனின் திறமையை முழுவதும் சோதிப்பதாக நான் நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகள் எப்போதும் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிக் கொண்டு வந்ததாக நினைக்கிறேன். ஏனென்றால், ஒருநாள் போட்டிகளில் நான் சவாலான சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தருவதை விரும்புகிறேன். நான் எப்போதும் அதனை செயல்படுத்த முயற்சிக்கிறேன். இந்த மாதிரியான சவால்கள் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பாக அமைகின்றன. அதனால், நான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை அதிகம் விரும்புகிறேன் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →