ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிக வெற்றி விகிதத்தை கொண்ட அணியாக இலங்கை உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் தொடர் ஆசியக் கோப்பை.
16-ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, பாகிஸ்தானின் முல்தான் நகரில் இன்று தொடங்குகிறது.
பாகிஸ்தான் நடத்தும் இந்தப் போட்டியில், இறுதி ஆட்டம் உள்பட மொத்தம் 13 ஆட்டங்கள் நடைபெறும் நிலையில், அதில் 4 ஆட்டங்கள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியா விளையாடுவது உள்பட, இதர ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இறுதி ஆட்டம் கொழும்பில் செப்டம்பா் 17-ஆம் தேதி நடைபெறும்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை வரலாற்றில் 50 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி அதிகபட்சமாக 34 போட்டிகளில் வென்று 68 சதவிகித வெற்றியுடன் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து, இந்தியா 63.26, பாகிஸ்தான் 57.77, ஆப்கானிஸ்தான் 33.33, வங்கதேசம் 16.27 சதவிகித வெற்றியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.