கோப்புப்படம் 
செய்திகள்

அணியின் தேவைக்கேற்ப பந்துவீச தயாராக இருக்கிறேன்: முகமது ஷமி!

அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

DIN

அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடர் நேற்று (ஆகஸ்ட் 30) முதல் தொடங்கியது. நாளை மறுநாள் (செப்டம்பர் 2) இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. காயம் காரணமாக அணியில் இல்லாதிருந்த ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. பும்ரா அணியில் இல்லாதபோது ஷமி மற்றும் சிராஜ் இந்திய அணிக்காக தொடக்க ஓவர்களை வீசினர். தற்போது பும்ரா அணிக்குத் திரும்பியுள்ளதால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் பும்ராவுடன் இணைந்து புதிய பந்தில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. 

இந்த நிலையில், அணியின் தேவைக்கேற்ப புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக இருப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: புதிய பந்து அல்லது பழைய பந்தில் பந்து வீசுவதில் எனக்கு தயக்கம் எதுவும் கிடையாது. இந்த விஷயத்தில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் மூவரும் (பும்ரா, ஷமி, சிராஜ்) சிறப்பாக பந்து வீசுகிறோம். அணியின் தேவைக்கேற்ப புதிய அல்லது பழைய பந்தில் பந்துவீச தயாராக உள்ளேன். வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து தொடர்பாக அதிகம் பேசப்படுகிறது. நீங்கள் சரியான இடத்தில் பந்துவீசினால் எந்த நிற பந்து என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. உங்களுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுத்தால் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். காயத்திலிருந்து மீண்டு பும்ரா அணியில் இணைந்துள்ளது அணிக்கு வலு சேர்க்கும். அவர் சிறப்பாக பந்துவீசுகிறார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT