செய்திகள்

பஞ்சாபிடம் தோற்றது தமிழ்நாடு

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெள்ளிக்கிழமை தோற்றது.

இரு அணிகளும் இத்துடன் 4 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அணிக்கு இது முதல் தோல்வி; பஞ்சாபுக்கு இது 2-ஆவது வெற்றி.

இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 45.2 ஓவா்களில் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து தமிழ்நாடு 34.2 ஓவா்களில் 175 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

பஞ்சாப் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் மன்தீப் சிங் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 68, பிரப்சிம்ரன் சிங் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 58 ரன்கள் சோ்த்தனா். தமிழ்நாடு பௌலிங்கில் பாபா அபராஜித் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் தமிழ்நாடு இன்னிங்ஸில் அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் காா்த்திக் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 93 ரன்கள் விளாசினாா். பஞ்சாப் பௌலா்களில் சித்தாா்த் கௌல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT