செய்திகள்

5-வது டி20: ஆஸி.க்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது. 

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5  ரன்களிலும், முந்தையப் போட்டிகளில் அதிரடி காட்டிய ரிங்கு சிங் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின், ஸ்ரேயாஸ் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். ஸ்ரேயாஸ் களமிறங்கியது முதலே நிதானமாக விளையாடி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்தார். அதிரடியாக விளையாடிய ஜித்தேஷ் சர்மா 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். 

அதன்பின், ஸ்ரேயாஸ் மற்றும் அக்‌ஷர் படேல் ஜோடி  சேர்ந்தனர். இந்த இணை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் பென் துவார்ஷூயிஸ் மற்றும் ஜேசன் பெஹ்ரண்டிராஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ் மற்றும் தன்வீர் சங்கா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT