செய்திகள்

கடைசி டி20: தொடரை வெல்லும் முனைப்பில் ஜிம்பாப்வே, அயர்லாந்து!

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று  டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

DIN

ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று  டி20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டு அணிகளும் விளையாடி வருகின்றன.

அயர்லாந்து அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (டிசம்பர் 10) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேவும், இரண்டாவது போட்டியில் அயர்லாந்து அணியும் வெற்றி பெற்றன. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்த நிலையில், டி20 தொடரை வெல்லப்போவது யார் எனத் தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று  நடைபெற்று வருகிறது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT