செய்திகள்

இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் டி20: தீபக் சஹார் அணியில் இல்லை!

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார்.

DIN

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும், மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (டிசம்பர் 10) முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சஹார் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும், மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீபக் சஹாரின் நெருங்கிய உறவினர் மருத்துவமனையில் அனுமதிப்பட வேண்டிய சூழல் இருப்பதால், அவர் டர்பனில் இந்திய அணியுடன் இன்னும் இணையவில்லை. அதன் காரணமாக அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றையப் போட்டியில் அவர் விளையாடவில்லை.  அவருடைய உறவினரின் உடல்நிலையைப் பொறுத்தே அவர் இந்திய அணியுடன் இணைவாரா மாட்டாரா என்பது தெரியும்  என்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியிலும் தீபக் சஹார் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

SCROLL FOR NEXT