செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் இந்த ஆஸ்திரேலிய வீரர் அதிக விலைக்கு வாங்கப்படுவார்: ஆகாஷ் சோப்ரா

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

DIN

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலம் வருகிற டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஜியோ சினிமாவில் ஆகாஸ்வானி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பலரும் தங்களது பெயரை ஐபிஎல் ஏலத்துக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வீரர் மிட்செல் ஸ்டார்க். புதிய பந்தில் அவர் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். ஆட்டத்தின் தொடக்கத்தில் விக்கெட்டுகளை எடுக்கும் திறன் வாய்ந்தவர். கடந்த காலங்களில் அவர் பெங்களூரு அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT