செய்திகள்

முதலிடத்தில் சிஎஸ்கே: விரக்தியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!

ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். 

DIN

அண்மையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா தான் முன்பு விளையாடிய அணியான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்தார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை பாண்டியா கேப்டனாக வழிநடத்தி வந்தார். அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவதாக எடுத்த முடிவுக்கு மதிப்பளித்து அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் விற்றது குஜராத் டைட்டன்ஸ்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவாரென மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் ரோஹித் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை காட்டும் விதமாக இன்ஸ்டாவில் மும்பை இந்தியன்ஸ் பக்கத்தினை (அன்பாலோவ்) பின் தொடர்வதில் இருந்து விலகி வருகிறார்கள். 

இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் பக்கத்தின் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 13.2 மில்லியனிலிருந்து 12.9 மில்லியனுக்கு குறைந்துள்ளது. இதன் விளைவாக சிஎஸ்கே அணி 13 மில்லியனுடன் முதலிடம் பிடித்துள்ளது. 

ஐபிஎல் போட்டிகளில் இந்த இரண்டு சாம்பியன் அணிகளுக்கு எப்போதும் போட்டியிருக்கும். இதில் 5 முறை இரண்டு அணிகளும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

ம.பியில் உயிரிழந்த தமிழக தொழிலாளி குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி!

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

SCROLL FOR NEXT