செய்திகள்

அறிமுகப் போட்டியில் அரை சதமடித்த தமிழக வீரர் சாய் சுதர்ஷன்: இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

DIN

இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடா் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் இன்று (டிச.17)  வாண்டரா்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்கியுள்ளது.  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஆவேஷ் கான் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை இழந்தது.  27.3 ஓவர் முடிவில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அர்ஷ்தீப் சிங்

அடுத்து எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ருதுராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க சாய் சுதர்ஷன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டார்கள். 

16.4 ஓவரில் இந்திய அணி (117) இலக்கினை எட்டியது. அறிமுகப் போட்டியிலேயே தனது அரைசதத்தினை அடித்து அசத்தினார் தமிழக வீரர் சாய் சுதர்ஷன். இறுதி வரை ஆட்டமிழக்காமல் 55* ரன்கள் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதமடித்து (52) ஆட்டமிழந்தார். திலக் வர்மா 1 ரன்களுடன் இருந்தார். 

ஆட்டநாயகன் விருது அர்ஷ்தீப் சிங்குக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT