செய்திகள்

அர்ஷ்தீப், ஆவேஷ் கான் அசத்தல்: 116 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 116 ரன்களுக்கு சுருண்டது. 

DIN

இந்திய அணி தற்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தொடா்களில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதலில் டி20 தொடா் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் ஒருநாள் தொடா் இன்று (டிச.17)  வாண்டரா்ஸ் மைதானத்தில் முதல் ஆட்டம் தொடங்கியுள்ளது.  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தது.

இந்தியாவின் வேகப் பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப், ஆவேஷ் கான் பந்து வீச்சில் 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

 ஆவேஷ் கான்

அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் குல்தீப் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தியுள்ளார்கள். 27.3 ஓவர் முடிவில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பெக்லுக்வாயோ 

தென்னாப்பிரிக்கா சார்பில் ஆண்டிலே பெக்லுக்வாயோ(33),  டோனி டி ஜோர்ஜி (28), மார்கரம் (12), ஷம்ஸி (11) ஆகியோர்கள் மட்டுமே இரண்டு இலக்க ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தார்கள். 

ரீஜா ஹெண்டிரிக்ஸ், வான் டெர் டுஸென், வியான் முல்டர் ஆகியோர் டக்கவுட்டானார்கள். 

இந்தியா வெற்றி பெற 117 ரன்கள் இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பும் அழகும்... தீப்தி சதி!

உஷ்... மீண்டும் வருக... அஞ்சு குரியன்!

வெளிநாட்டில் தங்கம் வாங்க திட்டமா? எச்சரிக்கை! | Cyber Alert | Cyber Security

என் இதயமே... நைலா உஷா!

அழகு பொம்மை... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT