செய்திகள்

ஷேன் வார்னேவின் சாதனையை லயன் முறியடிப்பார்: கம்மின்ஸ் புகழாரம்!

ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் லயன் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடிப்பாரென கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 

DIN

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-இல் தொடங்கியது. 4-ஆம் நாள் ஆட்டத்தில் லயன் 27.1 வது ஓவரில் பஹீம் அஸ்ரஃப் விக்கெட்டினை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய வெற்றியினை பெற்றுள்ளது. இதன் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் 36 வயதான நேதன் லயன். 

  1. ஷேன் வார்னே- 708 விக்கெட்டுகள் (145 போட்டிகள்) 
  2. க்ளென் மெக்ரத் - 563 விக்கெட்டுகள் (124 போட்டிகள்) 
  3. நேதன் லயன் - 501 விக்கெட்டுகள் (123 போட்டிகள்) 

உலக அளவில் சுழல் பந்து வீச்சாளர்கள் வரிசையில் 3வது இடமும் அனைத்து பந்து வீச்சாளர்கள் வரிசையில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 9வது இடத்தில் இருக்கிறார். 

இந்நிலையில் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ், “ஷேன் வார்னேவின் சாதனையை லயனால் முறியடிக்க முடியும். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் விளையாட முடியும். ஆண்டுக்கு 10 போட்டிகள் என்றாலும் 40-50 போட்டிகள் அவரால் விளையாட முடியும். சராசரியாக ஒரு போட்டிக்கு 4-5 விக்கெட்டுகள் எடுத்தாலும் இன்னும் சில நூறு விக்கெட்டுகள் எடுக்கலாம். அப்படி பார்த்தால் 700 வந்துவிடுமே” எனக் கூறியுள்ளார். 

ஆஃப்- ஸ்பின்னர் ஒருவர் டெஸ்டில் 500 விக்கெட்டுகள் எடுப்பது இது இரண்டாவது முறையாகும்.

படம்: ஐசிசி | எக்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT