சென்னை சூப்பர் கிங்ஸில் ஷர்துல், ரச்சின்!
ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
துபை: ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
துபையில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஷர்துல் தாகூர்
அடிப்படை விலை: ரூ. 2 கோடி
இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
இதையும் படிக்க | சன் ரைசர்ஸில் டிராவிஸ் ஹெட்; ராஜஸ்தானில் ரோவ்மன் பாவெல்
ரச்சின் ரவீந்திரா
அடிப்படை விலை: ரூ. 50 லட்சம்
இவரை ஏலத்தில் எடுக்க தில்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.