செய்திகள்

துபையில் டென்னிஸ் விளையாடிய தோனி - பந்த்!

துபையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், ரிஷப் பந்தும் டென்னிஸ் விளையாடிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

DIN

துபை: துபையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், ரிஷப் பந்தும் டென்னிஸ் விளையாடிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், பந்த் கேப்டனாக உள்ள தில்லி கேபிடல்ஸ் உள்பட 10 அணிகள் பங்கேற்றன.

இந்த ஏலத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும் அணியின் நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக துபைக்கு தோனி சென்றிருந்தார்.

அதேபோல், சாலை விபத்தில் காயமடைந்து மீண்டும் உடல்தகுதி பெற்று வரும் தில்லி அணியின் கேப்டன் பந்த் இந்தாண்டு ஐபிஎல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், துபைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், ஏலம் முடிந்த பிறகும் துபையில் தங்கியிருக்கும் தோனியும், பந்தும் டென்னிஸ் விளையாடும் விடியோ ஒன்று புதன்கிழமை இணையத்தில் வைரலானது.

மேலும், தோனி, பந்த் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

ஜார்க்கண்ட் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது: மமதா இரங்கல்

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT