முகப்பு
செய்திகள்

பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற மாட்டேன்: பஜ்ரங் புனியா

பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற போவதில்லை என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:31 PM
பகிர்:

பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற போவதில்லை என ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளித்தார். 

இந்த நிலையில், பத்மஸ்ரீ விருதை திரும்பப்பெற போவதில்லை என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீதி கிடைக்கும் வரை பத்மஸ்ரீ விருதினை திரும்பப்பெறப் போவதில்லை. எங்களது சகோதரிகளின் கௌரவத்தைக் காட்டிலும் எந்த ஒரு விருதும் பெரிது கிடையாது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →