செய்திகள்

இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கிரண் பொல்லார்டு!

இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன்  கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன்  கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி டி20  உலகக் கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன்  கிரண் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளது முக்கியத்தும் பெறுகிறது.

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் கிரண் பொல்லார்டை இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் உலகக் கோப்பை டி20 போட்டிகள் நடைபெறுவதால், டி20 உலகக் கோப்பைக்காக இங்கிலாந்து அணியைத் தயார் செய்யும் பொருட்டு அவர் இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண் பொல்லார்டு மேற்கிந்தியத் தீவுகளை 63 சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT