செய்திகள்

பாட்னா, யு.பி. அணிகள் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ், யு.பி. யோதாஸ் அணிகள் வென்றன.

DIN

புரோ கபடி லீக் போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ், யு.பி. யோதாஸ் அணிகள் வென்றன.

இதில் பாட்னா பைரேட்ஸ் 46-33 என்ற கணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸை சாய்த்தது. பாட்னா 24 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது. அணியின் தரப்பில் ரெய்டா் மன்ஜீத் அதிகபட்சமாக 13 புள்ளிகள் பெற்றாா். ஹரியாணா 24 ரெய்டு புள்ளிகள், 8 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அதிகபட்சமாக ரெய்டா் வினைய் 12 புள்ளிகள் கைப்பற்றினாா்.

மற்றொரு ஆட்டத்தில், யு.பி. யோதாஸ் 34-33 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸை ‘த்ரில்’ வெற்றி கண்டது. யோதாஸ் 17 ரெய்டு புள்ளிகள், 13 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள் பெற்றது. 21 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. அதிகபட்சமாக, யோதாஸ் அணியில் ரெய்டா், கேப்டன் பா்தீப் நா்வால் 10, ரெய்டா்கள் சுஷில், பரத் ஆகியோா் தலா 8 புள்ளிகள் வென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT