செய்திகள்

வலைப்பயிற்சியில் ஷர்துல் தாக்குர் காயம்; இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டது.

DIN

இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டது.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான் டெஸ்ட் தொடர்  தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. 

இந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோளில் அடிபட்டது. 

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்புடன் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தபோது ஷர்துல் தாக்குருக்கு தோள்பட்டையில் அடிபட்டது. அதன்பின், ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் பந்துவீசவில்லை. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 19 ஓவர்களில் 100-க்கும் அதிகமான ரன்களை ஷர்துல் தாக்குர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலாறு படைக்கப்பட்டுவிட்டது! மகளிர் கிரிக்கெட் அணிக்கு ரஜினி வாழ்த்து!

ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு!

நவ. 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!

கோவை பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? -இபிஎஸ் கண்டனம்

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரி மனு! உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

SCROLL FOR NEXT