கோப்புப்படம் 
செய்திகள்

இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல இது மிகவும் முக்கியம்: மிதாலி ராஜ்

மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வெல்வது அணியில் உள்ள முன் வரிசை ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அமையும் என இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

DIN

மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வெல்வது அணியில் உள்ள முன் வரிசை ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அமையும் என இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் வருகிற பிப்ரவரி 10 முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த நிலையில், டி20 மகளிர் உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி வெல்வது அணியில் உள்ள முன் வரிசை ஆட்டக்காரர்களின் ஆட்டத்தைப் பொறுத்தே அமையும் இந்திய மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை வெல்வது அணியின் முன் வரிசை ஆட்டக்காரர்களின் கையில் தான் உள்ளது. ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடுகிறார். அவர் போட்டிகளை வென்றுத் தருபவர். ஹர்மன்பிரீத் கவுரும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணியினை வீழ்த்த மற்ற முன்வரிசை வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்து வீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் ஷபாலி வெர்மா மற்றும் ரிச்சா கோஷ் அணிக்கு பலமாக இருப்பார்கள் என்றார்.

இந்திய அணி வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT