செய்திகள்

இந்திய மண்ணில் தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா!

சமீபகாலமாக இந்தியாவில் விளையாடும் டெஸ்டுகளில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார் புஜாரா.

DIN

சமீபகாலமாக இந்தியாவில் விளையாடும் டெஸ்டுகளில் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார் புஜாரா.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

 ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 2-வது நாளன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்து விளையாடி வருகிறது. 

இன்று, புஜாரா 7 ரன்களில் மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். 

2002-ல் இந்திய அணி 7 டெஸ்டுகளில் விளையாடியது. அதில், புஜாரா 5 டெஸ்டுகளில் விளையாடினார். இந்நிலையில் சொந்த மண்ணில் சமீபகாலமாக மோசமாக விளையாடி வருகிறார் புஜாரா. 

2021 முதல் இந்தியாவில் விளையாடிய 11 இன்னிங்ஸில் 235 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி - 21. ஒரு அரை சதம் மட்டும். அதிகபட்ச ஸ்கோரே - 73 தான். 

இதன் காரணமாக அணியிலிருந்து புஜாரா நீக்கப்பட வாய்ப்புள்ளதா? நிச்சயமாக இல்லை. சமீபத்தில் வங்கதேசத்தில் ஒரே டெஸ்டில் 90, 102* என ரன்கள் எடுத்தார் புஜாரா. கடைசி 3 டெஸ்டுகளில் ஒரு சதமும் இரு அரை சதங்களும் எடுத்துள்ளார். அதனால் புஜாராவுக்கு முழு தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சர்யப்பட முடியாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT