பிரவீன் சித்ரவேல் 
செய்திகள்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்று தமிழக வீரர் சாதனை!

ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

DIN


ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

கஜகஸ்தானில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தமிழகத்திலிருந்து 7 பேர் உள்பட, இந்தியா சார்பில் 26 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

இந்தநிலையில், மும்முறை தாண்டுதல் (ட்ரிபிள் ஜம்ப்) போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் 16.98 மீட்டர் தொலைவுக்குத் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இந்திய வீரர் அமர்ஜீத் சிங் 16.26 மீட்டர் தூரம் தாண்டியதே தேசிய அளவிலான சாதனையாக இருந்த நிலையில், தற்போது பிரவீன் சித்ரவேல் இந்த சாதனையை முறியடித்துள்ளார். 

21 வயதான பிரவீன் சித்ரவேல் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு! - நீதிமன்றத்தில் தகவல்

இனி Restroom போனால்கூட! பத்திரிகையாளர்கள் குறித்து இபிஎஸ்!

புரட்டாசி மாதப் பலன்கள் - கடகம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மிதுனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT