செய்திகள்

பிருத்வி ஷா தாக்கப்பட்ட சம்பவம்: போலீஸ் காவலில் நடிகை!

கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவத்தில் நடிகை சப்னா கில் பிப்ரவரி 20 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். 

DIN

கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவைத் தாக்கிய சம்பவத்தில் நடிகை சப்னா கில் பிப்ரவரி 20 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். 

மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் 2-வது தடவையாக செல்பி எடுக்க சம்மதிக்காத காரணத்தால் பிரபல கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவை போஜ்பூரி நடிகை சப்னா கில் தாக்கினார். 

இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. மேலும் பிருத்வி ஷாவின் நண்பரின் காரும் தாக்கப்பட்டது. காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. 

இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டு, அந்தேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நடிகை சப்னா பிப்ரவரி 20-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT