செய்திகள்

உமேஷ் யாதவின் தந்தை காலமானார்

35 வயது உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக 54 டெஸ்டுகள், 75 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

DIN

பிரபல கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவின் தந்தை காலமானார். அவருக்கு வயது 74. 

35 வயது உமேஷ் யாதவ், இந்திய அணிக்காக 54 டெஸ்டுகள், 75 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். எனினும் முதல் இரு டெஸ்டுகளிலும் அவர் விளையாடவில்லை. 

இந்நிலையில் உமேஷ் யாதவ் தந்தை திலக், உடல்நலக்குறைவு காரணமாக நாகபுரியில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திலக் இன்று காலமானார். 

2-வது டெஸ்டுக்குப் பிறகு உமேஷ் யாதவ் உள்பட இந்திய வீரர்கள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்கள். இதனால் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு 3-வது டெஸ்ட் தொடங்கு முன்பு இந்திய அணியினருடன் உமேஷ் யாதவ் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு... தெ.ஆ. வரலாற்று வெற்றி..! இந்தியா ஒயிட்வாஷ்!

மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

நிர்வாணக் காட்சியில் நடித்தது ஏன்? ஆண்ட்ரியா விளக்கம்!

3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தை உயர்வுக்கான 3 காரணங்கள்?

10 நிமிடத்திற்கு ஒரு பெண், நெருங்கிய உறவினரால் கொல்லப்படுகிறார்! - ஐ.நா.

SCROLL FOR NEXT