விஜய் சங்கர் (கோப்புப் படம்) 
செய்திகள்

ரஞ்சி கோப்பை: அபாரமான பேட்டிங்கினால் தோல்வியைத் தவிர்த்த தமிழ்நாடு!

தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.

DIN

தமிழ்நாடு - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.

மும்பையில் மும்பை - தமிழ்நாடு ஆகிய அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்றது.  டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.  தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 36.2 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரதோஷ் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட்டுகளையும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 106.4 ஓவர்களில் 481 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 162, தனுஷ் 71, மோஹித் 69 ரன்கள் எடுத்தார்கள். தமிழக அணியின் திரிலோக் நாக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்றது மும்பை அணி.

2-வது இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தித் தோல்வியைத் தவிர்த்தது தமிழக அணி. முன்னணி பேட்டரான பாபா இந்திரஜித்தும் பிரதோஷும் விஜய் சங்கரும் அபாரமாக விளையாடி சதமடித்தார்கள். 4-வது நாளான இன்று தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் 162.5 ஓவர்களில் 548 ரன்களை எடுத்தது. பிரதோஷ் 169, பாபா இந்திரஜித் 103, விஜய் சங்கர் 103 ரன்கள் எடுத்தார்கள். தனுஷ் 4 விக்கெட்டுகளும் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதனால் மும்பை அணிக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணி 2-வது இன்னிங்ஸில் 24.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT