டிராவிட் - அஸ்வின் (வலது) 
செய்திகள்

ஆஸி. டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருகிறேன்: அஸ்வின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருவதாகப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராகி வருவதாகப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9 அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் டெஸ்ட் தொடர் பற்றி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அஸ்வின் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாட இருந்தேன். ஆனால் வங்கதேசத் தொடருக்குப் பிறகு உண்டான சிறு காயங்கள், வலிகளைத் தற்போது கவனித்து வருகிறேன். சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, நான்கு வாரப் பயிற்சியில் என் உடலை வலுவாக்கி வருகிறேன். யோகா பயிற்சியில் ஈடுபடுகிறேன். கடந்த ஒரு வருடமாக இதைச் செய்கிறேன். என் திறமையை நன்கு உணர வைக்க உதவுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காகக் காத்திருக்கிறேன். என்னுடைய பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக என்னுடைய பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன். சொந்த மண்ணில் விளையாடும்போது கூடுதல் உழைப்பைச் செலுத்துகிறேன். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா விளையாடி வருவதைப் பார்த்து வருகிறேன். பந்துவீச்சில் சில புதிய விஷயங்களில் கவனம் செலுத்த ஆர்வமாக உள்ளேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT