செய்திகள்

‘தீ’யாக சதமடித்த சூர்யகுமார்: ஹைலைட்ஸ் விடியோ! 

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்தார் சூர்யகுமார் யாதவ். அதன் ஹைலைட்ஸ் விடியோ. 

DIN

இந்தியா-இலங்கை இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை (ஜன.7) இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. 

முதலில் ஆடிய இந்தியா 228/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய இலங்கை 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பேட்டா் சூர்யகுமாா் யாதவின் அதிரடி சததத்தால், இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. 

சூர்யகுமாா் யாதவ் 51 பந்துகளில் 9 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 112 ரன்களை விளாசி இறுதி வரை களத்தில் இருந்தாா். வெறும் 26 பந்துகளில் சூர்யகுமாா் 50 ரன்களைக் கடந்தாா். இது சூர்யகுமாரின் 3-ஆவது டி20 சதமாகும். தொடக்க வீரராக களமிறங்காமல் இத்தனை சதமடித்த முதல் வீரரும் இவரே. நேற்று (ஜனவரி 7) சூர்யகுமார் அடித்த ஒவ்வொரு ஷாட்டுகளையும் கிரிக்கெட் ரசிகர்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். சூர்யாவின் அதிரடியான சதத்தினை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT