செய்திகள்

முதல் ஒருநாள்: பாகிஸ்தான் துணை கேப்டனுக்கு அணியில் இடமில்லை!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் துணை கேப்டனுக்கு வாய்ப்பளிக்க முடியாத நிலைமை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

DIN

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் துணை கேப்டனுக்கு வாய்ப்பளிக்க முடியாத நிலைமை பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாபர் ஆஸம், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

33 வயது ஷான் மசூத், பாகிஸ்தான் அணிக்காக 28 டெஸ்டுகள், 5 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ஒருநாள் அணியில் விளையாடிய ஷான் மசூத், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வானார். ஒருநாள் ஆட்டம் தொடங்கும் முன்பு, பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் துணை கேப்டனான ஷான் மசுத் இடம்பெறவில்லை. ஹாரிஸ் சொஹைல், சல்மான், ரிஸ்வான் ஆகியோர் நடுவரிசையில் விளையாட வேண்டியிருப்பதால் பாகிஸ்தான் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் ஆஷஸ் தொடா் இன்று தொடக்கம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT