செய்திகள்

டி20 தரவரிசை: சூர்யகுமார் யாதவ் சாதனை

ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

DIN

ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இலங்கைக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ். இதையடுத்து ஐசிசி டி20 தரவரிசையில் 908 புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் 900 புள்ளிகளை எட்டிய முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு டேவிட் மலான், ஆரோன் ஃபிஞ்ச் ஆகிய இருவரும் மட்டுமே 900 புள்ளிகளை அடைந்துள்ளார்கள். இந்திய வீரர்களில் கோலி அதிகபட்சமாக 897 மற்றும் ராகுல் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.

முதல் 5 இடங்களில் சூர்யகுமார், ரிஸ்வான், கான்வே, பாபர் ஆஸம், மார்க்ரம் ஆகியோர் உள்ளார்கள். கோலி 13-வது இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT