செய்திகள்

துளிகள்...

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடரின் 2-ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருக்கிறது.

DIN

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடரின் 2-ஆவது ஆட்டம் கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருக்கிறது.

துபையில் நடைபெறவுள்ள இன்டா்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவா் ஜெய் ஷா பங்கேற்கும் பட்சத்தில், ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் இடம் தொடா்பான விவகாரத்தை அவருடன் பேசத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் நஜம் சேத்தி கூறினாா்.

அடிலெய்ட் இன்டா்நேஷனல் 2 டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன்/மிகேல் ரெயெஸ் வரேலா இணை 3-6, 4-6 என நெதா்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜா்/எல் சால்வடோரின் மாா்செலோ அரிவாலோ கூட்டணியிடம் தோற்றது. அதேபோல், இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யு எப்தென் 6-7 (4/7), 5-7 என்ற கணக்கில் பிரான்ஸின் நிகோலஸ் மஹட்/ஜொ்மனியின் டிம் பட்ஸ் இணையிடம் தோற்றனா்.

ஒடிஸாவின் கட்டாக் நகரில் உள்ள மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், சா்வதேச ஹாக்கி சம்மேளன தலைவா் தயாப் இக்ரம், ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் (வலது). கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற நடனம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT