மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: ஷஃபாலி அதிரடியால் 219 ரன்கள் குவித்த இந்திய அணி
இந்திய மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.
செய்திகள்மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: ஷஃபாலி அதிரடியால் 219 ரன்கள் குவித்த இந்திய அணி
இந்திய மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.
மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இந்திய அணி, 20 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்துள்ளது.
தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.
பெனோனியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மாவும் ஸ்வேதா ஷெராவத்தும் அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். இருவரும் சேர்ந்து முதல் 6 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தார்கள். அதற்குள் ஷஃபாலி வர்மா 10 பவுண்டரிகள் அடித்திருந்தார். 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்தார் ஷஃபாலி. இதனால் இந்திய அணி 9 ஓவர்களிலேயே 118 ரன்கள் எடுத்தது. ரிச்சா கோஷ் 29 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஸ்வேதா ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்திய மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.