செய்திகள்

சென்னையில் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடவுள்ள ஜடேஜா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.

DIN

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா, தனது உடற்தகுதியை நிரூபிக்க ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் விளையாடவுள்ளார்.

காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணி தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஜடேஜா விளையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் ஜனவரி 24 அன்று தொடங்குகிறது. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும் ஜடேஜா விளையாடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT