இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வாகாத மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கான் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் மும்பை பேட்டர் சர்ஃபராஸ் கான் இடம்பெறவில்லை. இதையடுத்து தனது வருத்தத்தை ஊடகங்களில் அவர் பதிவு செய்தார்.
இந்நிலையில் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார் சர்ஃபராஸ் கான்.
தில்லியில் மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தில்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை 66 ரன்களுக்கு இழந்து தடுமாறியது மும்பை அணி. இதன்பிறகு சர்ஃபராஸ் கான், மும்பை அணியைச் சரிவிலிருந்து காப்பாற்றினார். அற்புதமாக விளையாடி மீண்டும் சதமடித்தார். 135 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 250 ரன்களைக் கடந்தது மும்பை அணி.
ரஞ்சி கோப்பைப் போட்டியில் விளையாடிய கடைசி 25 இன்னிங்ஸில் 10 சதங்களும் 5 அரை சதங்களும் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான். இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியில் சர்ஃபராஸ் கானைச் சேர்க்க வேண்டும் எனச் சமூகவலைத்தளங்கள் வழியாக பிசிசிஐயிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.