மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தில்லி அணி.
தில்லியில் மும்பை - தில்லி அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற தில்லி அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை 66 ரன்களுக்கு இழந்து தடுமாறியது மும்பை அணி. இதன்பிறகு சர்ஃபராஸ் கான், மும்பை அணியைச் சரிவிலிருந்து காப்பாற்றினார். 135 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 293 ரன்கள் எடுத்தது.
தில்லி அணி முதல் இன்னிங்ஸில் நன்கு விளையாடி 369 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. வைபவ் 114 ரன்களும் கேப்டன் ஹிம்மத் சிங் 85 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த மும்பை அணி, 2-வது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ரஹானே 51 ரன்கள் எடுத்தார். சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆனார். 20 வயது திவிஜ் மெஹ்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
தில்லி அணி வெற்றி பெற 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி, 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் எலைட் குரூப் பி பிரிவில் மும்பை அணி 23 புள்ளிகளும் தில்லி அணி 11 புள்ளிகளும் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.