பிக் பாஷ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ச்சியாக 2-வது சதம்!
தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 66 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்து...
பிக் பாஷ் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்து அசத்தியுள்ளார் பிரபல வீரர் ஸ்டீவ் ஸ்மித்.
பிரபல ஆஸி. பேட்டர் ஸ்மித், ஜனவரி 17 அன்று பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 101 ரன்கள் எடுத்தார். பிபிஎல் போட்டியில் ஸ்மித் எடுத்த முதல் சதம் அது. இந்நிலையில் சிட்னி சிக்ஸர்ஸ் - சிட்னி தண்டர் அணிகளுக்கு இடையிலான பிபிஎல் ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ஸ்மித், 66 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 125 ரன்கள் எடுத்து பிபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது சதமடித்தார். பிபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.