செய்திகள்

பிரபல டி20 வீரர் ஓய்வு அறிவிப்பு

2010 முதல் இவர் இடம்பெற்ற அணிகள் 9 டி20 போட்டிகளை வென்றுள்ளன.

DIN

பிரபல ஆஸ்திரேலிய வீரர் டேன் கிறிஸ்டியன், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

39 வயது டேன் கிறிஸ்டியன், ஆஸ்திரேலிய அணிக்காக 20 ஒருநாள், 23 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் 405 டி20 ஆட்டங்களில் விளையாடி பிரபல டி20 வீரராக அறியப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 5809 ரன்களும் 280 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், தில்லி டேர்டெவில்ஸ், ரைசிங் புணே சூப்பர்ஜெயண்ட், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

2010 முதல் இவர் இடம்பெற்ற அணிகள் 9 டி20 போட்டிகளை வென்றுள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெறும் பிபிஎல் போட்டியுடன் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேன் கிறிஸ்டியன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்து அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார். இதனால் ஓய்வுக்குப் பிறகு லீக் போட்டிகளில் பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT