முகப்பு
செய்திகள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா

2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 

ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் இல்லை. 10.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. 6-வது மற்றும் 7- விக்கெட்டுக்கு தலா 40 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் நியூசிலாந்து பேட்டர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. 

கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில், நியூசிலாந்து அணி, 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி 3, பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சிராஜ், தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 20.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 51, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →