முகப்பு
செய்திகள்

கே.எல். ராகுலின் காதல் திருமணம் எப்போது நடைபெறுகிறது?: வெளியான தகவல்கள்!

திருமணம் குறித்த அறிவிப்பை கே.எல். ராகுல் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல், நடிகை அதியா ஷெட்டியை திங்கள் அன்று திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சொந்தக் காரணங்களுக்காக கே.எல். ராகுல் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் தனது காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டியை திங்கள் அன்று திருமணம் செய்யவுள்ளார் கே.எல். ராகுல். இதுகுறித்து அதிகாரபூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும் திருமணம் குறித்த சில தகவல்கள் மும்பை ஊடகங்களில் வெளியாகியுள்ளன. 

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. 2015 முதல் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். 

மும்பையில் உள்ள அதியா ஷெட்டியின் வீட்டில் நாளை (ஞாயிறு) மெஹந்தி விழா நடைபெறவுள்ளது. திங்கள் அன்று, மலை வாசஸ்தலமான கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஆகிய இருவருக்கும் காதல் திருமணம் நடைபெறவுள்ளது. இரு தரப்பிலிருந்து தலா 100 பேர் மட்டுமே இத்திருமணத்தில் கலந்துகொள்ளவுள்ளார்கள். மேலும் திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் யாரும் புகைப்படம், விடியோ எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் போட்டிக்குப் பிறகு பாலிவுட், கிரிக்கெட் நட்சத்திரங்களுக்காக மும்பையில் பெரிய அளவில் திருமண வரவேற்பை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் குறித்த அறிவிப்பை கே.எல். ராகுல் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →