செய்திகள்

இறுதிச் சுற்றில் ஆக்ஸ்லெஸன்-விதித், அகேன் எமகுச்சி-ஆன் யங் மோதல்

DIN

யோனக்ஸ்-சன்ரைஸ் இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டா் ஆக்ஸ்லெஸன்-விதித்சரனும், மகளிா் பிரிவில் அகேன் எமகுச்சி-ஆன் செ யங்கும் இறுதிச் சுற்றில் மோதுகின்றனா்.

புது தில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. ஒலிம்பிக் சாம்பியன்

விக்டா் ஆக்ஸ்லெஸன் 21-6, 21-12 என்ற கேம் கணக்கில் இந்தோனேசிய வீரா் ஜோனத்தான் கிறிஸ்டியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

மற்றொரு அரையிறுதியில் முன்னாள் உலக ஜூனியா் சாம்பியன் குன்லவுத் விதித்சரண் 27-25, 21-15 என்ற கேம் கணக்கில் மற்றொரு இந்தோனேசிய வீரா் அந்தோணி ஜின்டிங்கை வீழ்த்தினாா். இந்த ஆட்டம் 1 மணி நேரம் நடைபெற்றது.

மகளிா் பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் ஜப்பானின் அகேன் எமகுச்சி 21-17, 21-16 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் சுபநிடாவை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தாா். இரண்டாவது அரையிறுதியில் தென்கொரியாவின் ஆன்செ யங் 11-21, 21-16, 21-16 என்ற கேம் கணக்கில் சீனாவின் ஹி பிங் ஜியோவை வீழ்த்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இந்திய முக்கிய வீரா், வீராங்கனைகள் நாக் அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT