செய்திகள்

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் சதம்: வேகமாக ரன்கள் குவிக்கும் இந்திய அணி!

இந்திய அணி தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள்.

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சிப்லிக்குப் பதிலாக ஜகோப் டஃபி தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் இரு மாற்றங்கள். ஷமி, சிராஜுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், சஹால் விளையாடுகிறார்கள். 

ஆரம்பம் முதல் வேகமாக ரன்கள் எடுத்தார்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும். 10 ஓவர்களின் முடிவில் 82 ரன்கள் கிடைத்தன. ஷுப்மன் கில் 32 பந்துகளிலும் ரோஹித் சர்மா 41 பந்துகளிலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்கள். தொடர்ந்து வேகமாக ரன்கள் எடுத்ததால் ஸ்கோர் 25-வது ஓவரில் 200 ரன்களைத் தொட்டது. 

நீண்ட நாள் கழித்து ஒருநாள் சதமெடுத்தார் ரோஹித் சர்மா, 83 பந்துகளில். இது அவருடைய 30-வது ஒருநாள் சதம். ஜனவரி 2020-க்குப் பிறகு முதல்முறையாக சதமெடுத்துள்ளார். அடுத்ததாக ஷுப்மன் கில் 72 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 4-வது ஒருநாள் சதம். கடந்த 4 ஒருநாள் ஆட்டங்களில் இரட்டைச் சதம் உள்பட மூன்று சதங்களை எடுத்துள்ளார் கில். 

எனினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். ரோஹித் சர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்களிலும் ஷுப்மன் கில் 78 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 113 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.

இந்திய அணி 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. கோலி (20), இஷான் கிஷன் (0) களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT