செய்திகள்

தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள்: ஜடேஜா எத்தனை விக்கெட்டுகள் எடுத்தார்?

செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு...

DIN

செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியுள்ளது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.

முதல் நாளன்று நிதானமாக விளையாடிய தமிழ்நாடு அணி, 4 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 45, விஜய் சங்கர் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 2-ம் நாளில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். 

காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT