செய்திகள்

தமிழக வீரர் அஸ்வினை இந்தியாவின் கேப்டனாக தேர்வு செய்யலாம்: தினேஷ் கார்த்திக்

பிரபல கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வினை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.

DIN

113 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 151 விக்கெட்டுகளும் 92 டெஸ்டில் விளையாடி 474 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ஐசிசி சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் 2வது இடத்திலும் பந்து வீச்சில் முதலிடத்திலும் உள்ளார்.  

ஒருநாள் உலகக் கோப்பை அக்.5ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்குமென எதிரப்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் அஸ்வின் விளையாடுவாரா எனத் தெரியவில்லை. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:

ஆசியப் போட்டிகளில் இந்திய அணி பி அணியைத்தான் அனுப்புமென நினைக்கிறேன். ஒருநாள் உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இல்லையெனில் ஆசியப் போட்டிகளில் அஸ்வினை கேப்டனாக பிசிசிஐ நியமிக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பினை கவனியுங்கள். ஒருமுறையாவது இந்திய அணிக்கு அஸ்வின் கேப்டனாக வேண்டுமென நினைக்கிறேன். அஸ்வின் அதற்கு தகுதியான நபர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT