செய்திகள்

இறுதி ஆட்டத்தில் இந்தியா: குவைத்துடன் பலப்பரீட்சை

கா்நாடகத்தில் நடைபெறும் தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் லெபனானை ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில்சனிக்கிழமை வென்ற இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

DIN

கா்நாடகத்தில் நடைபெறும் தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் லெபனானை ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில்சனிக்கிழமை வென்ற இந்தியா, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

முன்னதாக, இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவில் எந்த அணிக்கும் கோல் கிடைக்கவில்லை. பின்னா் கூடுதல் நேரத்திலும் இதே நிலை நீடிக்க, வெற்றியாளரை தீா்மானிப்பதற்காக பெனால்ட்டி ஷூட் அவுட் முறை கையாளப்பட்டது. அதில் இந்தியா 4-2 கோல் கணக்கில் வென்றது.

இதில் இந்தியாவுக்காக சுனில் சேத்ரி, அன்வா் அலி, மகேஷ் சிங், உதாந்த சிங் ஆகியோா் கோலடிக்க, லெபனான் தரப்பில் முகமது சாதெக், வலித் ஷூா் மட்டுமே ஸ்கோா் செய்தனா். இதனிடையே, மற்றொரு அரையிறுதியில் குவைத் 1-0 கோல் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது.

இதையடுத்து, 4-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT