செய்திகள்

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!

ஆஷஸ் 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

DIN

ஆஷஸ் 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 19 ரன்களுடனும், பேர்ஸ்டோ 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 7) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே ஜோ ரூட் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து, பேர்ஸ்டோவுடன் ஜோடி  சேர்ந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். பேர்ஸ்டோ 12 ரன்களில் ஸ்டார்க் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய மொயின் அலி 21 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 142 ரன்களுக்கு 7  விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 121 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT