படம்: ட்விட்டர் | இங்கிலாந்து கிரிக்கெட் 
செய்திகள்

3வது ஆஷஸ் போட்டி: மழையால் தாமதம்! 

லீட்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஷஸ் போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

DIN

லீட்ஸ் நகரில் கடந்த 6-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியாவில் பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். மிட்செல் மாா்ஷ் (118 ரன்கள்) தனியொருவராக சதமடித்து ரன்கள் சோ்த்ததால் அந்த அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோா் 263-ஐ எட்டியது. இங்கிலாந்து பௌலிங்கில் மாா்க் வுட் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.  

முதல் இன்னிங்ஸில் ஆஸி.263 ரன்களுக்கும் இங்கிலாந்து 237 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஆஸி. இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் ஆஸி. 116/4 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹட் 18*, மிட்செல் மார்ஷ்  17* ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.  

இந்நிலையில் இன்று இந்திய நேரப்படி 3.30 மணிக்கு நடக்கவிருந்த போட்டி மழையினால் தாமதமாகியுள்ளது. 

2-0 என ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது. டெஸ்டில் 3வது நாளை ‘மூவிங் டே’ என்று அழைப்பர். இதை வைத்து எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்கலாம். 

3 டெஸ்ட் போட்டிகளிலும் மழை ஒருநாளாவது தவறாமல் வந்து விடுகிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மழை- 3, இங்கிலாந்து -0 என கிண்டலாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT